சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்-2 படத்தில் இருந்து புதிய பாடல் - நாளை வெளியீடு
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்-2' படத்தில் இருந்து புதிய பாடல் - நாளை வெளியீடு

தினத்தந்தி
|
9 May 2023 11:11 PM IST

‘பிச்சைக்காரன்-2’ படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து 'பிச்சைக்காரன் -2' வரும் மே 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அதில், "நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 'ஆப்பிரிக்க கடவுள்' என்ற புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்